19 ஆகஸ்ட் 2015

shanthi social services - coimbatore

               சாந்தி சோசியல் சர்வீசஸ் - கோயம்புத்தூர்.

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம். கோவையில் செயல்பட்டுவரும்  சாந்தி சோசியல் சர்வீசஸ் அறக்கட்டளையின் சமூக நலப்பணிகளைப் பற்றி அறிந்துகொள்வோம். வாழ்த்து கூறி நாமும் விழிப்புணர்வு பெறுவோம்.

              கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரிந்திருக்கும்.. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே..

சாந்தி கியர்ஸ் திரு பி.பழனிசாமி அவர்கள். தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோசியல் சர்வீசஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர். 
காண்க வலைத்தள முகவரி    http://www.shanthisocialservices.org/

சாந்தி கியர்ஸ் பி.பழனிசாமி அவர்கள் செயல்படுத்தும் சமூக நலப்பணிகளில் தங்களது பார்வைக்காக  சில...

1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)

2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள், எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான கட்டணம் அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீட்டருக்கு  குறைவான தூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)

3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.

4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து, இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க.

5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.

மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளைக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி சென்டர் ,
ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் சர்வீசஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் சமூமகத்தின் சார்பாக வாழ்த்துக்களும்,சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.

இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை 
 என அன்புடன்,
 C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...