06 மார்ச் 2014

இரத்த ஓட்ட மண்டலம் மூன்று-மனித உடலின் அதிசயங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
              இரத்த ஓட்ட மண்டலம் பகுதி மூன்று இந்த பதிவில் இதயம், நுரையீரல், மற்றும் கல்லீரல் இரத்த ஓட்டம் பற்றி காண்போம்.

           இருதயம்;-
                    இருதயம் மூன்று நிலைகளில் இயங்குகிறது.இதயம் சுருங்குவது சிஸ்டோலி என்று பெயர்.இதனால் இரத்தம் அழுத்தப்பட்டு தமனிகள் வழியாக உயிர்க்காற்றையும்,உணவுச்சத்துக்களையும் அனைத்து உறுப்புகளுக்கும் செலுத்தப்படுகிறது.
இதயம் விரிவடைவதற்கு டயஸ்டோலி என்று பெயர்.இதனால் அனைத்து உறுப்புகளிலிருந்தும் கழிவுகளானஅசுத்த இரத்தங்கள் சிரைகள் வழியாக இருதயத்திற்கு வருகிறது.
மூன்றாவது நிலை ஓய்வு நிலை ஆகும்.ஒவ்வொரு முறை இதயம் சுருங்கும்போது 60cc இரத்தம் இறைக்கப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு சுமார் நான்கு லிட்டர் இரத்தம் இறைக்கப்படுகிறது.

         நுரையீரல் இரத்த ஓட்டம்;-
                              உடலின் மேற்பாகத்தில் இருந்து மேல் பெருஞ்சிரையின் மூலமாகவும்,உடலின் கீழ்ப்பாகத்திலிருந்து கீழ் பெருஞ்சிரையின் மூலமாகவும் வரும் அசுத்த இரத்தம் இதயத்தின் வலது ஏட்ரியத்திற்குள்  கொண்டு வரப்பட்டு  வலது ஏட்ரியம் சுருங்கி  வலது வெண்டிரிக்கிள் க்குள்  இரத்தத்தை செலுத்துகிறது.பிறகு வலது வெண்டிரிக்கிள் சுருங்கி அசுத்த இரத்தத்தை நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்குள் செலுத்தப்படுகிறது.நுரையீரலின் செயல்பாட்டால் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு நுரையீரல் சிரை வழியாக மீண்டும் இதயத்தின் இடது ஏட்ரியம் பகுதிக்குள் செலுத்தப்படுகிறது.இடது ஏட்ரியம் சுருங்கி இடது வெண்டிரிக்கிள் பகுதிக்கு செலுத்தப்படும் இரத்தம் வெண்டிரிக்கிள் சுருங்குவதால் இதய தமனி வழியாக சுத்தம் செய்த இரத்தம் உடலின் பிற பாகங்களுக்கு செல்கிறது. இவ்வாறாக நுரையீரலில் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது.இங்கு ஒரு வேறுபாட்டினை அறிந்து கொள்ள வேண்டும்.இதய தமனிக்குழாய்களில்  தூய்மையான இரத்தம் ஓடும்.ஆனால் நூரையீரல் தமனிக்குழாய்களில் மட்டும் அசுத்த இரத்தம் ஓடும்.அதேபோல இதய சிரை குழாய்களின் வழியாக அசுத்த ரத்தம் இதயத்திற்கு திரும்ப பெறப்படும்.ஆனால் நுரையீரல் சிரை குழாய்களில் மட்டுமே சுத்தமான இரத்தம் ஓடும்.

     கல்லீரல் இரத்த ஓட்டம்;-
                  இரைப்பை,சிறுகுடல்,பெருங்குடல், மண்ணீரல்,கணையம்,பித்த நீர் பைகளில் இருந்து பெறப்படும் அசுத்த இரத்தம் போர்ட்டல் சிரை வழியாக கல்லீரலுக்கு செல்கிறது.இந்த போர்ட்டல் சிரையானது சிறிய கிளைகளாக பிரிந்து மேலும் பல தந்துகிகளாக பிரிந்து கல்லீரலுக்குள் நுழைந்து அங்குள்ள கழிவுப்பொருட்களை பெற்றுக்கொண்டு கீழ்ப்பெருஞ்சிரை குழாயுடன் சேர்ந்து கொள்கிறது.அதாவது சிரை குழாய் வழியாக செல்லும் இரத்தம் கல்லீரல் வழியாக சென்றுதான் பொது இரத்த மண்டலத்திற்குள் செல்கிறது.இந்த இரத்த ஓட்டத்தின் மூலமாக கல்லீரல் தனது பாதுகாப்பு பணிகளையும், வளர்சிதை மாற்றத்தில் மேற்கொள்ளும் பணிகளையும் நிறைவேற்றிக்கொள்கிறது.
        மனித உடலின் அதிசயங்கள்.

   இன்னும் தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...