15 மார்ச் 2014

நூலகம் துவக்கம் நம்ம ரங்கசமுத்திரத்தில்.....

மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.
                      ''கொங்குத்தென்றல்'' வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.5 மார்ச் 2014 அன்று ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் வட்டம் ரங்கசமுத்திரம் பகுதியில் பகுதி நேர நூலகம் புதியதாக துவக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.கடந்த அதாவது 5-மார்ச்-2014ம் தேதி புதன்கிழமை அன்று ரங்கசமுத்திரம் (பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்) அரசினர் ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர்  நலத்துறை பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி அருகில் திறக்கப்பட்டுள்ளது.இதனால் ரங்கசமுத்திரம் வட்டாரத்தில் உள்ள என் போன்ற வாசிப்பை  நேசிப்பவர்களுக்கு வெகுதொலைவில் உள்ள வரதம்பாளையம் நூலகம் செல்லவேண்டிய நேரமும் அலைச்சலும் மீதப்படுத்தப்பட்டுள்ளது.நூலம் துவக்க முயற்சி எடுத்து செயல்படுத்த காரணமான அனைவரையும் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்கள் பல.
 
                    இன்று  16-மார்ச்-2014 இன்று நான் புதிய நூலகத்திற்கு சென்று ரூபாய் அறுபது கட்டி உறுப்பினராக சேர்ந்தேன்.புத்தகங்கள் மட்டும் மூன்று வழங்கினார்கள்.அதற்கான ரசீது கொடுக்கவில்லை.உறுப்பினருக்கான எண்ணும் கொடுக்கவில்லை .உறுப்பினர் எண் என்ன என்று கேட்டால் அதற்கும் பதில் சொல்ல தயங்குகிறார்கள்.சரி இதுவரை எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை!.இது என்போன்ற வாசிப்பை நேசிக்கும் வாசகர்களுக்கு மிகவும் வருத்தமாகவும் அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.நான் தீவிரமாக உறுப்பினர்களை சேர்க்க செயலில் இறங்க இருந்தேன்.இந்த செயலால் எனக்கு நூலகத்தில் உறுப்பினர்களை சேர்க்க செய்யும் முயற்சி தொய்வடைந்து வெறுப்பு ஆகி உள்ளது.உடனே நூலகம் சம்பந்த அதிகாரிகள் கவனித்து என் போன்ற வாசகர்களிடத்தில் உறுப்பினருக்கான பணம் மட்டும் பெற்றுக்கொண்டால் போதாது. அப்போதே  உறுப்பினர் எண் வழங்க வேண்டும்.அல்லது உறுப்பினர் எண் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.அப்போதுதான் மேலும் உறுப்பினர்களை சேர்க்க தீவிரம் காட்ட முடியும்.
                                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...