05 அக்டோபர் 2012

தொழிற்களம் குழு அறிமுகம்-பேருந்து ஓட்டுனர்பரமேஸ்வரன்

மரியாதைக்குரிய நண்பர்களே,
      வணக்கம்.
       என்னை இவ்வளவு உயர்வாக பாராட்டி நான் பதிவர் அறிமுகத்தில் பதிவு செய்த மேன்மைமிகு ''தொழிற்களம்'' வலைத்தளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல உரித்தாகுக!. நான் இவ்வளவு காலம் தொழிற்களம் குழு என்னை அறிமுகம் செய்தமை பற்றிய விபரம் (05-10-2012வரை) அறியாமல் சிறுபிள்ளைத்தனமாக இருந்தமைக்கு ''தொழிற்களம் குழு''விற்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.தங்களது எண்ணத்தைப்போலவே நானும்  வாழும்வரை மனிதனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.சமூகத்திற்காக எனது பணியை தொடருவேன் என தொழிற்களம் குழு வாயிலாக உறுதிபடக்கூறி வணங்குகிறேன்.நன்றிங்க!






Sunday, September 02, 2012  தொழிற்களம் குழு  13 comments
   தமிழகத்தில் பேருந்து  ஓட்டுனர்களுக்கென்ற சில விதிமுறைகள் இருக்கிறது. சாலை பாதுகாப்பு என்பது மிக முக்கியம். இதில் ஓட்டுனர்களுக்கு தான் பெரும் பங்கு இருக்கின்றது. 

இங்கே நாம்  சாலையோட்டிகளின்  உயிருக்கு கருத்தில் கொண்டு இவரை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. அனைத்து பேருந்து ஓட்டுனர்களையும் மிஞ்சி இவர் மிக மிக வேகமாக செல்வதால் எக்கச்சக்கமான பின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேருகிறது. இனியும் இவர் இவ்வளவு வேகமாக ஓட்டினால் பதிவுலகமே திரண்டு வந்து பெரும் போராட்டத்தில் குதிக்க ஆரம்பித்துவிடும்.   அட யாரும் அவசரப்பட்டு அவரை திட்ட ஆரம்பிச்சுடாதீங்க.. நாம், அவர் பதிவிடும் வேகத்தை தான் சொன்னோம் பேருந்து ஓட்டும் வேகத்தை அல்ல..



      ஓரு அற்புதமான மனிதர். திரு.பரமேஸ்வரன்  அய்யா அவர்கள். கொங்கு தென்றல் என்ற வலைப்பூவை தற்போது எழுதி வருகிறார். கிட்டத்தட்ட 2011 ஜனவரி மாதத்திலிருந்து இவர் பரமேஸ் டிரைவர் என்ற வலைப்பூவில்  பதிவுகளை எழுதி வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணி புரிகிறார். இவர் பேருந்து மேலும், வலைப்பதிவுகள் மேலும் தீராத காதல் கொண்டவர்.

சாலை விதிகளை அனைவரும் சரியாக புரிந்து கொண்டு பின்பற்றினாலே பெரும்பாலான  விபத்துக்களை குறைக்க முடியும் என்று சாலை ஓட்டிகளுக்கு  தனது வலைப்பூ மூலம் அறிவுறுத்தி வருகிறார்.

தொழிற்களம் குழு இவரை நான் பதிவர் அறிமுகத்தில்  தெரியப்படுத்துவதற்காக நிச்சயம் பெருமை படுகிறது. காரணம் இவரிடம் பேசிய, போது இவரது உடனே பழகும், உதவும் குணமும், எப்போதும் துரு துருவென இயங்கும் தன்மையுமே ஆகும்.

மனிதனுக்கு அடிப்படை தேவைகள் எனப்படுவது,
  • உண்ண உணவு,
  • உடுத்த உடை,
  • இருக்க இருப்பிடம் என்று மற்றும் அல்லாது
  • போக்குவரத்து என்னும் நான்காவது அடிப்படை தேவை இருக்கிறது. என்று புதிய கோணத்தில் சிந்தித்ததும், அதன்படியே போக்குவரத்து குறித்து இவர் பதிந்து வரும் பதிவுகளும்  என்றுமே   படிப்பவர்களுக்கு ஆசானாக வீற்றிருக்கும்.

சாலையில் விபத்துகள் ஏற்படுவதற்கான பல்வேறான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் எளிய நடையில் சொல்வது இவரது தனித்தன்மை.

இன்னும் அதிகமான தகவல்களை இவரது தளத்தில் நீங்கள் பார்க்கலாம். இவரை போன்ற சமூக நோக்கத்துடனே தமிழில் பயணிக்கும் அனைவரையும் தொழிற்களம் குழு உற்சாகப்படுத்திடவே இந்த நான் பதிவர் அறிமுகம் பகுதி உருபெற்றிருக்கிறது.





September 2, 2012 6:37 PM Reply
பதிவர் அறிமுகம் பகுதி உருபெற்றிருப்பதற்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
September 2, 2012 6:45 PM Reply
ஓரு அற்புதமான மனிதரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு தொழிற்களம் குழுமத்திற்கு மிக்க நன்றி...

சென்னை திருவிழாவில் அவரிடம் பேச முடியவில்லையே என்று வருந்துகிறேன்...
Lakshmi says:
September 2, 2012 7:10 PM Reply
நல்ல ஆரம்பம் தொடரட்டும் வாழ்த்துகள்.
September 2, 2012 7:42 PM Reply
அம்மாவின் புகைப்படங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறோம்.. தாமத்திற்கு மன்னிக்கவும்...
Kathir Rath says:
September 2, 2012 7:54 PM Reply
எனக்கு தெரிந்து நான் 2 மணி நேரத்திற்கு மேலாக இருந்தது இவரது வலைத்தளத்தில் மட்டும்தான், அவ்வளவு விஷயங்கள், இன்னமும் நிறைய படிக்காமல் இருக்கிறேன், அனைவருக்கும் அறிமுகப்படுத்திய தொழிற்களத்திற்கு நன்றி
September 2, 2012 8:15 PM Reply
பல்துறை சார்ந்தோரும் பதிவு உலகிற்கு வருவது நன்மைதான், ஐயாவிற்கு வாழ்த்துக்கள் , , தங்கள் சேவை தொடரட்டும், நன்றி
September 2, 2012 8:18 PM Reply
இப்படி அருமையாக பதிவரை அறிமுகப்படுத்தும் தொழிற் களம் தளத்திற்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் பணி, நன்றி
September 2, 2012 8:41 PM Reply
மிகவும் தெள்ளத்தெளிவாக பல விஷயங்களை தனது பதிவில் பதித்திருக்கும் இவரை, பதிவர் விழாவில் சந்திக்காமல் விட்டு விட்டோமே என்ற வருத்தப் படுகிறேன்.
தொழிற்களத்தின் முயற்சிகள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்!
September 2, 2012 8:45 PM Reply
தொழில்களம் என்று படிக்கவும்.

September 2, 2012 9:25 PM Reply
யோசனை சூ....ப்....ப்.. பர்!
September 3, 2012 2:30 PM Reply
வாழ்த்துக்கள்
September 3, 2012 10:34 PM Reply
நல்லதோர் அறிமுகம்.வாழ்த்துக்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...