19 செப்டம்பர் 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் பொதுக்குழு கூட்டம்-2012

அன்பு நண்பர்களே,வணக்கம். 
             17-09-2012 இன்று மாலை5-30 மணிக்கு தமிழ்நாடுஅறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் TNGEA - அலுவலகத்தில்  நடைபெற்றது.


      மாநிலத்தலைவர் பேரா.ந.மணி அவர்கள் பொதுக்குழுக்கூட்டத்தில் விவாதித்த காட்சி.அருகில் திரு.சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து அவர்கள்.




      மாவட்ட செயலாளர் திரு.ர. மணி அவர்கள் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் பற்றி  ஏட்டில் பதிந்த காட்சி.அருகில் மரியாதைக்குரிய ரேவதி அம்மையார் அவர்கள் மலாய் சென்று கற்பித்தலில் எளிமை பற்றி ஆய்வுநூல் எழுதி சமர்ப்பித்து அதற்காக வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் ஆய்வு நூலை பார்வையிடும் செயற்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து அவர்கள்.

        பொதுக்குழு கூட்டத்தில்  முக்கிய நிகழ்வாக கணித மேதை இராமானுசர் பிறந்த ஊரான நமது மாவட்டத்தலைநகராம் ஈரோடு என்பதை வெளிநாடுகளைச்சேர்ந்த ஆய்வாளர்கள், கல்வியாளர்கள்,கணித மேதைகள்,அறிஞர்கள் அறிந்து அதன்விளைவாக நமது ஈரோடு நகருக்கு வருகை தந்து கணித மேதை இராமானுசர் பிறந்த வீட்டை அடையாளம் கண்டு செல்கின்றனர்.அவர்களுக்கு வழிகாட்டியாக பேரா.ந.மணி அவர்களே செயல்பட்டு கணித மேதை பிறந்த வீட்டை அடையாளம் காட்டி வருவதை சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்த கட்டமாக கணித மேதை 125 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி இந்த வருடத்தை நமது அரசு தேசிய கணித ஆண்டாக அறிவித்து வருடம் நிறைவடைவதை ஒட்டி நிறைவு விழாவினை நமது ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.அந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளராக திரு.சக்கரவர்த்தி அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
         அடுத்து உரையாற்றிய திருமிகு. சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகள் உட்பட பொதுஇடங்களில் விருப்பமுள்ள புரவலர்களைக்கொண்டு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள புத்தகங்களை நூலக அலமாரியுடன் சேர்த்து வழங்கும் அற்புத யோசனையை தெரிவித்தார்.அதற்கான விபரம் வேண்டுவோர் தமிழ்நாடு அறிவியல் இயகம்-ஈரோடு மாவட்ட நண்பர்களை அணுகவும்.அல்லது இங்கு கருத்துரை இடவும்.ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் புத்தக அலமாரி இலவசமாக வழங்கப்படும்.என்பது கவனிக்க வேண்டியது ஆகும்.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...