23 செப்டம்பர் 2011

பித்தம்01

பித்தப்பை
பித்தக் கற்கள்
பித்தக் கற்கள். (Gall stones)

அறிமுகம்.(Introduction)


பித்தக் கற்கள் உனப்படுபவை சிறிய கல் போன்ற திண்மக்கட்டிகளாகும். இவையாவும் பித்தப்பையிலேயே (Gallbladder)  உருவாக்கப்படுகின்றன. இவ்வருத்தத்தைப் பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வதற்கு ஈரல் மற்றும் பித்தப்பாதைகள் பற்றித் தெரிந்திருத்தல் அவசியமாகும்.

ஈரல் மற்றும் பித்தப்பாதை. :

பித்தப் பாதையானது பித்தத்தினைக் கடத்துகின்ற தொழிலைச் செய்கிறது. பித்தமானது ஈரலில் உருவாக்கப்படுகின்றது. பின்னர் பித்தப்பாதையில் சேமிக்கப்பட்டு தேவையேற்படின் பித்தக் குழாயினுடு முன்சிறுகுடலை அடைகிறது. பித்தக் குழாயானது பித்தக்கற்களினால் அடைப்புக்கு உட்படுமாயின் பித்தச் சுற்றோட்டம் தடுக்கப்டுவதனால் பித்தக் குழாயினுள் பித்தம் தெங்குகின்றது. உடலில் பித்தத்தின் அளவு கூடுவதனால் உடலும் கண்ணும் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இது Jaundice    என அழைக்கப்படும். பித்தக்குழாயின் அடைப்பினால் ஏற்படுவதனால் இவ்வகை Jaundice   ஆனது Obstuctive Jaundice  என அழைக்கப்டும்.

     பித்தமானது சிறிகுடலை அடைந்தத்தும் அங்கு காணப்டும் கொழுப்புவகை உணவுகளை  குழம்புகளாக அதாவது சிறு சிறு துணிக்கைகளாக உடைக்கிறது. இதன் மூலம் கொழுப்புப் பதார்த்தங்கள் சமிபாடைந்து அகத்துறிஞ்சப் படுகின்றது. 

        பித்த்தில் காணப்படும் பிளிரூபின் (bilirubin)  என்ற பதார்த்தத்தின் முடிவுப் பொருட்களினாலேயே மலத்தின் மஞ்சள் நிறம் ஏற்படுகின்றது. பித்தத்தின் பாதை அதாவது  பித்தக்குழாய் அடைப்புக்குள்ளாகின்ற பொழுது மலத்தின் மஞ்சள் நிறம் அற்றுப் போகிறது . இதனால் மலம் மஞ்சள் நிறமாக மாறும்.
          பித்தக் குழாய் அடைப்புக்குள்ளாகின்ற பொழுது குருதியில் பித்தத்தின் அளவ் அதிகரிப்பதனால் தோலில் மஞ்சள் நிறமான பித்தம் படிவடைவதனால் தோல் மஞ்சளாவதஞடன் (Jaundice) சிறுநிருடன் சேர்ந்து பித்தப் பொருட்கள் வெளியேறுவதனால் சிறுநீர் தேனிர் நிறத்தில் / Coco—cola  நிறதத்ில் வெளியேறும்.

பித்தப்பாதையில் ஏதாவது நோய்கள் ஏற்படுமாயின் அதனால் எண்டாகும் நோவு வயிற்றின் மெல் பகுதியில் வலியாக உணரப்படும்.

         பித்தக்கற்களில் பலவகையுண்டு. பெரும்பாலான கற்கள் கொலஸ்ரோல் மற்றும் பித்தப் பொருட்கள் என்பவற்றினால் ஆக்கப்பட்டது. பித்தக் கற்களின் அளவு மற்றும் அவை காணப்படும் இடம் (பித்தப்பையா ? பித்தக் குழாயா?) என்பவற்றைப் பொறுத்து ஏற்படும் நோய்குணங்குறிகள் வேறுபடும்.

 
பித்தப்பை அழற்சி-அறிமுகம்

     பித்தப்பை அழற்சி (Acute Chole cystitis ) .
  அறிமுகம்.(Introduction)


பித்தக்கற்கள் பத்தப்பையின் குழாயை அடைப்பதனால் பித்ப்பையிலே விக்கம்  /அழற்சி ஏற்படும்.இது பித்தப்பை அழற்சி (Acute chole cystitis )  எனப்படும். பின்வரும் காரணங்களினால் பித்தக் கற்கள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

1.        அதிகரித்த உடற்பருமன்.
2.        40---50 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள். 
3.        கருத்தடைமாத்திரைகளைப் பயன்படுத்துதல்.
4.        கர்ப்பமாக இருத்தல்..
5.        குருதிக் கலங்கள் நீண்ட காலமாக உடைவடைதல் ( Chronic haemolysis ) .உதாரணம்  தலைசீமியா  (Thalasaemia)


பித்தப்பை அழற்சியின் நோய்க்குறிகள்

1. வயிற்றுவலி   
 * தொடக்த்தில் மேல்வயிற்றுப் பகுதியில் வலிகாணப்படும் பின்னர் வலதுபக்கமாக மேல்வயிற்றுப் பகுதியில் வலி காணப்படும்.
* ஆரம்பத்தில் வலி விட்டுவிடடு ஏற்படும் பின்னர் அது தொடர்ச்சியாகக் காணப்படும்.
2. வாந்தி வருவது போன்ற உணர்வு /வாந்தி ஏற்படலாம்.
3. காய்ச்சல் .(3839 ‘c)
4. அஜீரணத்தன்மை (Dyspepsia)
உணவு உண்டபின் விசேடமாகக் கொழுப்பு உணவுகளை உண்டபின் சமிபாடடையதாது போன்ற உணர்வு அல்லது வயிறு வீக்கமுற்றது போன்ற அசௌகரியம் ஏற்படலாம்.

5.வயிற்றின் வலது அமற்பகுதியில் ( அதாவது வலது விலாஎன்பு கூட்டிற்குக் கீழ் ) வைத்தியர் அமத்திப்பார்க்கும் போது வலி ஏற்படலாம்.


பரிசோதனைகள் :

 1. வயிற்றில் X—  கதிர் பரிசோதனை (Abdominal Xray)—10% பித்தக் கற்கள்   X—ray  பரிசோதனையில் அவதானிக்க முடியும்.

2.வயிற்றுப் பகுதியில் செய்யபபடும் ஸ்கான் பரிசோதனை (Abdominal  Ultra sound scan)  இதுமிகவும் முக்கியமான பரிசோதனை , இதன்மீலம் பித்தப்பபை பற்றியபல தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பித்தப்பையினுள் கற்கள் னகாணப்படுகின்றனவா ? பித்தப்பவைக்கமுற்று  /அழற்சியுற்றுக் காணப்படுகின்றதா ? பித்தக் குழாயினுள் பித்தம் தேங்கி நிற்கிறதா ? போன்ற பல வினாக்களுக்கான விடையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

                      தேவையைப் பொறுத்து வைத்தியர் உங்களை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்துவார்.



 
பித்தப்பை அழற்சி- நோய் நிர்ணயம்
 பித்தப்பை அழற்சி (Acute Cholecystitis)

 நோய் நிர்ணயம்.(Diagnosis)


பித்தக்கற்கள் பத்தப்பையின் குழாயை அடைப்பதனால் பித்ப்பையிலே விக்கம்  /அழற்சி ஏற்படும்.இது பித்தப்பை அழற்சி (Acute chole cystitis )  எனப்படும்.


நோய் நிர்ணயம் செய்தல்

       நோயாளியினால் வழங்கப்படுகின்ற நோய்விபரங்களின் மூலமாகவும், மருத்துவர் நோயாளியின் உடலைப்  பரிசோதித்துப் பாரப்பதன் மூலமாகவும்  , மேலதிகமாக வயிற்றில் செய்யப்படும் ஸ்கான் பரிசோதனை மூலமாகவும் பித்தப்பை அழற்சி (Acute chole cystitis) ஆனது காணப்படுவது உறுதிப்படுத்தப்படும்.

 பித்தப்பை அழற்சிக்கு சிகிச்சை வழங்கப்படாவிடின் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்.

1.          பித்தப்பயைனுள் சீதம் அதிகளவலு சுரக்கப்பட்டு பித்தப்பை மேலும் வீக்கமுறுவதனால் சீதத்தால் நிரப்பப்பட்ட பித்தப்பை ஏற்படலாம் ( Mucocele)
2.          Mucocele  இற்குள் நுண்ணங்கித் தொற்றல் ஏற்படுவதனால் சீழ்நிறைந்த பித்தப்பறைபடலாம். (Emphyma)
3.          Emphyma  வீங்கி வெடிப்பதனால்(Perforation)  வயி்றுக் குழியின் மற்றய பகுதிக்கும் நுண்ணங்கித் தொற்றல் பரவலாம்.
4.            சில வேளைகளில் பித்தப்பையினுள் காணப்டுகின்ற பித்தக்கற்கள் முன்சிறுகுடலினுள் செல்வதால் அக்கல்லானது சமிபாட்டுத் தொகுதியில் அடைப்பினை (Intestinal obstruction)  ஏற்படுத்தலாம்.
 
பித்தப்பை அழற்சி-சிகிச்சை

  பித்தப்பை அழற்சி (Acute Cholecystitis)

  சிகிச்சை (Treatment)


சிகிச்சை :
Acute Cholecystitis   உள்ளதென உறுதிப்படுத்தப்பட்வுடன் பித்தப்பயையினை வெட்டியகற்றுவதே  (Cholecystectomy)  பொருத்தமான சிகிச்சையாகும். அதற்கு முன்னதாக் கீழ்வரும் சிகிச்சைகளை வழங்குதல் முக்கியமானதாகும்.
·          வலியைக்குறைத்தல். ----இதற்காக வலிநிவாரணி மருந்துகள் வழங்கப்படும்.
·          நாளத்தினூடாக Fluids  (சேலைன் போன்றன ) வழங்கப்படுவதுடன் நுண்ணங்கிகளைக் கொல்லும் மருந்துகளும( Antibiotics)  வழங்கப்படும்.
·          உணவு உண்ணுதல் நிறுதத்ப்பட்டு நோயாளி வெறுவயிறாக இருக்கச்செய்யப்படுவார்.
·          இதன்பின்னர் நோயாளியின் நோய் நிலையினைப் பொறுத்து உடனடியாகச் சத்திரசிகிச்சை (Emergency cholecystectomy)  செய்வதா அலல்து 68 கிழமைகளுக்குப் பின்னர் சத்திரசிகிச்சை செய்வதா  (Elective surgery) என்பதை வைத்தியர் மிடிவு செய்வார்.


இருவகையான சத்திரசகிச்சைகள்  உள்ளன.

1.                      லப்பிரஸ்கோப்பிக் சத்திரசிகிச்சை (Laparoscopic Cholecystectomy)
2.                      வயிற்றுச் சுவரினை வெட்டி சத்திரசிகிசசை செய்தல். (open cholecystecttomy)   
தற்போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் Laparoscopic சத்திரசிகிச்சையே செய்யப்படுகின்றது. இதன்போது வயிற்றில் சிறிய துளைகள் இடப்பட்டு அதனூடு கமரா பூட்டப்பட்ட கம்பி ஒன்று செலுத்தப்பட்டு பித்தப்பையினை தொலைக்காட்சி திரையில் அவதானித்த வண்ணம் அது வெட்டியகற்றப்படும். இச்சத்திரசிகிசசையின் பின் வைத்தியசாலையில் தங்கியிருக்க வெண்டிய நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
   Laparoscopic  சத்தரசிகிசசைசைய்யமுடியாத சந்தர்ப்ங்களில் வயிற்றுச் சுவரில் வெட்டு ஒன்று உருவாக்கப்படுவதன் முலம் பித்தப்பை வெட்டியகற்றப்படும். இது  Open cholecystectomy  ஆகும்.     .


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...