13 ஆகஸ்ட் 2011

கணிணியில் இலவச டைரி


கணிணியில் இலவச டைரி
நாம் கணிணியில் புக்மார்க் குறித்து வைப்போம்.
சில நாள் கழித்து அது எதனுடைய புக்மார்க்-
அதனால் என்ன பயன் என மீண்டும் அந்த
புக்மார்க்கை நீங்கள் இணையத்தில் சென்றே
அறிந்து கொள்ள முடியும். உங்கள் நண்பர்
நீங்கள் குறித்துவைத்துள்ள புக்மார்க்கின்
இணைய முகவரி(URL) கேட்கின்றார். அந்த
சமயம் உங்கள் கணிணியில் இணைய இணைப்பு
துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பாது என்ன
செய்வீர்கள். அந்த மாதிரியான சமயங்களில்
இந்த கணிணி டைரி நமக்கு உதவுகின்றது.
நாம் நமது கணிணியிலேயே குறிப்புகளை
-இணைய முகவரிகளைநமது விருப்பமான
புக் மார்க்குகளை -சாப்ட்வேர் களின்
சீரியல் எண்களை எழுதிவைக்க இந்த டைரியை
பயன்படுத்தலாம். இணைய இணைப்பு
இல்லாத சமயங்களிலும் நாம் இந்த புக் மார்க்கை
பயன் படுத்தலாம்.முதலில் நமது கணிணியில்
இந்த டைரியை எப்படி வெளியே எடுத்துவரலாம்
என பார்க்கலாம்.முதலில் நீங்கள் டெக்ஸ்டாப்பின்
வெற்றிடத்தில் மவுஸால் கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இந்தமாதிரி ஒப்பன் ஆகும்.

அதில் உள்ள New என்கிறஇடத்தில் உங்கள் மவுஸின்
கர்சரை எடுத்துச்சென்றால் உங்களுக்கு
இந்த சரளம் ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Text Document –
மவுஸால் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான
Text Document ஆனது ஓப்பன் ஆகி
டெக்ஸ்டாப்பில் அமர்ந்துவிடும். பின் அதை
ரைட் கிளிக் செய்து Rename-ல்
உங்கள் விருப்பமான பெயரை தட்டச்சு
செய்யுங்கள்.நீங்கள் சூட்டிய பெயருடன்
Text Document காட்சியளிக்கும். இதை
ஓப்பன்செய்யுங்கள். உங்களுக்கு இந்த
சாரளம் ஓப்பன் ஆகும்.

சரி அதில் அன்றைய
தேதியை எப்படி எடுத்து வருவது. நீங்கள்
உங்கள் Key-Board –ல் F5 அழுத்துங்கள்.
உங்கள் Text Document –ல் அன்றைய தேதி
வந்துவிடும். நீங்கள் உங்கள் புக் மார்க்
இணைய முகவரியை அதில் பேஸ்ட்
செய்யுங்கள்.அத்துடன் அந்த இணையத்தை
பற்றியும் குறிப்புகளை யும் ஆங்கிலத்தில்
அல்லது தமிழில் தட்டச்சு செய்துவிடுங்கள்.
உங்கள் இணைய இணைப்பு இல்லாத
சமயங்களிலும் நீங்கள் சுலபமாக உங்கள்
புக்மார்க்கை யும்குறிப்புகளையும்
பார்க்கலாம். ஒருமுறை பயன்படுத்திப்
பாருங்கள். மறக்காமல் வாக்களியுங்கள்.
வாழ்க வளமுடன்,
      நன்றி!  வேலன்ஜீ அவர்களுக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...