18 ஜூலை 2017

துப்புறவுத்தொழிலாளர்களின் அவலநிலை பற்றிய விவாத நிகழ்ச்சி..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 17 ஜூலை 2017 இன்று காலை 10 மணிக்கு சத்தியமங்கலம் ரீடு அமைப்பின் அலுவலக வளாகத்தில் துப்புறவுத்தொழிலாளர்களின் பணி மற்றும் வாழ்க்கையின் அவலநிலை பற்றிய ஆவணப்படம் 'கக்கூஸ்' திரையிடப்பட்டது.தொடர்ந்து விவாதநிகழ்ச்சி நடைபெற்றது.திரு. தணிக்காச்சலம் ஐயா அவர்கள் உட்பட திரு.முருகன் அவர்கள்,திரு.மணி அவர்கள்,வினோத் ராஜேந்திரன் அவர்கள்,உட்பட  42 சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து விவாதித்த நான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் -
           972 வது குறளுக்கேற்ப,
அனைவரும் ஒரே இனமே என்பதை உணர வேண்டும்.
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். 
 பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் சுத்தமாக வைத்திருக்க சரியான விழிப்புணர்வினை சமூகத்தினரிடையே ஏற்படுத்த வேண்டும்.
பொதுக்கழிப்பிடங்கள்,சாக்கடைகள்,மருத்துக்கழிவுகள்,
இறைச்சிக்கழிவுகள்,என குப்பைகள் தானாக உருவாவதில்லை,உருவாக்கப்படுகின்றன என்பதை உணர வேண்டும்.
                  துப்புறவுப்பணியை குல தொழிலாக எண்ணி தாமாக விரும்பி ஏற்பதை தவிர்க்க வேண்டும்.படித்து வேறு பணிக்கு செல்லலாம்,பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
 .சாதியை ஒழிப்பதைவிட சாதிகள் சமநிலை அடைய வேண்டும்.தலித் இனத்தவர்களிடையே உள்ள சாதிப்படிநிலை சமநிலைப்பட வேண்டும்.தலித் இனத்தில் ஒரே சாதியில் பல உட்பிரிவுகள் அதுவும் மேல்சாதி,கீழ்சாதி என சாதிப்படிநிலை இருப்பது கொடுமையிலும் கொடுமை.
தலித் இனத்தவருக்காக அரசாங்கம் வழங்கும் சலுகைகளையும்,இலவசங்களையும்,இட ஒதுக்கீடு பணி வாய்ப்புகளையும் தலித் இனத்திலேயே ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே முழு பலனையும் அனுபவிப்பதை பட்டியலிடப்பட்ட சாதியினர் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க செய்யவேண்டும்.என விவாதம் செய்து தொடங்கி வைத்தேன்.

12 ஜூலை 2017

தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத் திருவிழா-2017


மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.வருகிற 2017 ஜூலை மாதம்15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்விழா,தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத்திருவிழா,தாளவாடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு முதலாம் ஆண்டு நிறைவுவிழா ஆகிய முப்பெரும்விழா தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.அனைவரும் வருகைபுரிந்து அறிவுச்செல்வத்தை அள்ளிச்செல்க! என அன்புடன் அழைக்கிறோம்...

25 ஜூன் 2017

GSTவரி விதிப்பு முறை!-

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
                           வருகிற 2017 ஜூலை மாதம் முதல் தேதி முதல்,ஒரே நாடு ஒரே வரி என்ற விதி உருவாக்கி ‘சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்னும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்த உள்ளது.எனவே,

ஜி.எஸ்.டியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
நமது நாட்டில் பலவிதமான வரிகள் அரசு மூலமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தனிநபரிடமோ அல்லது நிறுவங்களிடம் இருந்தோ அரசு வசூலிக்கும் வரிகளை வைத்துதான் அரசு இயந்திரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பலவிதமான வரிகள் விதிக்கப்படுகிறது.
இவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
 ஒன்று நேர்முக வரி மற்றொன்று மறைமுக வரி.

(1) நேர்முக வரி.
                 தனிநபர் வருமான வரி, நிறுவன வருமான வரி, சொத்து வரி, போன்றவைகள் நேர்முக வரி எனப்படும். இந்த வரியானது குறிப்பிட்ட நபரிடமோ, நிறுவனத்திடமோ அரசாங்கத்தால் நேரடியாக வசூலிக்கப்படும்.

(2)மறைமுக வரி:
                   கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி அல்லது மதிப்புக்கூட்டு வரி போன்றவைகள் மறைமுக வரிகளாகும். நாம் அன்றாடம் வாங்கும் பொருட்கள், சேவைகள் அனைத்தும் இந்த வரியை உள்ளடக்கித்தான் விலைக்கு வாங்குகிறோம். இந்த வரிகள் பல வகையான நபர்களிடம் பெறப்பட்டாலும் ,இதனை அரசிடம் கட்டும் பொறுப்பு இதனை வசூல் செய்பவரிடம் இருக்கிறது. .

ஜி.எஸ்.டி:
                          ஒரு பொருளின் மீதோ, சேவையின் மீதோ நாம் இப்படி மறைமுகமாக கட்டும் வரிகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டதுதான் ஜி.எஸ்.டி வரி (Service and goods tax ). தற்போதைய கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி அனைத்தும் நீக்கப்பட்டு அனைத்தையும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரப்படுவதுதான் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை.

                தற்போது பல்வேறு மாநிலங்களும் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டு வரிகளை வசூலித்து வருகிறது. பாண்டிச்சேரில் நீங்கள் ஒரு பொருளை 50 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால் தமிழகத்தில் அதே பொருளின் விலை சற்று அதிகமாக இருக்கும். இந்த விலை கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வேறுபடும். இந்த விலைமாற்றத்திற்கான காரணம் அந்தந்த மாநிலங்களில் மாறுபடும் வரிவிதிப்பு தான். மாநிலங்கள் தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த வரியால் குழப்பம்தான் நிலவி வருகிறது.

                இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் அனைத்து வரிகளும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரவே ஜிஎஸ்டி கொண்டு வரப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே வரி பின்பற்றப்படும். நாடு முழுவதும் வர்த்தகம் கையாளுவதில், வரி வசூலிப்பதில் இருக்கும் சிக்கல்களை களைவதற்கு இந்த முறை பின்பற்றப்படுகிறது.

                     ஜி.எஸ்.டி வரியானது மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST),மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST), மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) என மூன்று வகையாக வசூலிக்கப்படும்.

                         மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST): இந்த வருவாய் முழுவதும் மத்திய அரசின் மூலம் வசூலிக்கப்படும்.

                        மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST) : இந்த வருவாய் முழுவதும் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்.

                 மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) : மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மத்தியஅரசால் வசூலிக்கப்படும்.

எடுத்துக்காட்டு:
                  ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு வணிகர் சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அதே மாநிலத்தில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு விற்கிறார் என்று வையுங்கள். இந்த விற்பனையில், CGST விகிதம் 9% மற்றும் SGST விகிதம் 9% , இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வணிகர் 1800 ரூபாயை வரியாக வசூல் செய்வார். இந்த தொகையானது ஆந்திர அரசின் பங்கு 900 ரூபாய் மற்றும் மத்திய அரசின் பங்கு 900 ரூபாய் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது ஆகும். இந்த வரியில் தங்களுக்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து எடுத்துக்கொள்ளும்.

                       இப்போது, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு வணிகர், தமிழகத்தில் உள்ள ஒரு வணிகருக்கு சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்கிறார் என்று வையுங்கள். இந்த விற்பனையில், CGST விகிதம் 9% மற்றும் SGST விகிதம் 9% இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வரியாக 1800 ரூபாயை IGST ஆக வணிகர் வசூல் செய்கிறார். இந்த IGST தொகை மத்திய அரசுக்கு செலுத்தப்படும். ஆகையால் CGST மற்றும் SGST ஆகியவைகளை தனியாக செலுத்த வேண்டி இருக்காது.
மேலே, சொல்லப்பட்ட அனைத்து வரிகளுக்கான விலையும் அந்தந்த பொருளின் மீது கூட்டப்பட்டு கடைசியாக ஒரு பொருளை வாங்கும் நுகர்வோரிடம் அந்த தொகை வசூலிலிக்கப்படும்.

                      உதாரணமாக, நாம் ஒரு சோப்பை 100 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என்றால், அதில் மேலே சொன்ன ஜிஸ்டி வரிகளும் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் இனி இந்தியா எங்கும் ஒரே வரிவிகிதம் செயல் படுத்தப்பட்டு இனி அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் பொருட்கள் கிடைக்கும்.

                         இவ்வாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் எண்ணற்ற மற்றும் சிக்கலான மறைமுக வரிகளை நீக்கி, இந்த சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அமல்படுத்துவதன்மூலம் வரி நிர்வாகம் மிகவும் எளிமையாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் வெளிப்படையான வரிவிதிப்பு முறையால் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், உற்பத்தியாளர்கள் வரியை எளிதாகக் கட்டவும், நிர்வாகம் செய்யவும் இந்த மசோதா உதவும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வரியானது மாநில வரி வருவாயை பாதிக்கும் எனவும் ஒருசாரார் தொடர்ந்து குற்றச்சாட்டை கூறிவருகின்றனர். சாதாரணமாக அனைவரும் அறிந்து வைத்திருப்பது வீட்டு வரி, தண்ணீர் வரி, விற்பனை வரி என்பதுதான். மேலும் சில முக்கிய வரி வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம்.

நேர்முக வரிகள்: 
ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது வருமானத்தின் மீது போடப்படுவது. எ.கா. வருமானவரி, சொத்துவரி, நிலவரி.

மறைமுக வரிகள்: 
பண்டங்களின் மீது விதிக்கப்படுவது. எ.கா. இறக்குமதிவரி, கேளிக்கைவரி, விற்பனைவரி, சுங்கவரி, கலால்வரி.

மையஅரசு வரிகள்: 
வருமானவரி, சிறப்பு தீர்வைகள், செல்வவரி, ஏற்றுமதி இறக்குமதி வரி, ஆயத்தீர்வைகள்.
(மத்திய அரசுக்கு அதிக வருவாய் அளிப்பது கலால்வரி.)

மாநில அரசு வரிகள்:
நிலவரி (வேளாண்மை)பதிவுக்கட்டணங்கள், தொழில், வணிகம், வேலை மீதான வரிகள், விற்பனை வரி, கேளிக்கை வரி, மோட்டார் வாகன வரி, வேளாண்மை வரி.
(மாநில அரசுக்கு அதிக வருவாய் தருவது விற்பனை வரி)

ஆக்ட்ராய் வரி: 
நகருக்குள் வரும் பொருட்கள் மீது நகராட்சி விதிப்பது.

VAT (Value Added Tax) : மதிப்பு கூட்டப்பட்ட வரி.
ஒரு பொருளின் உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் விதிக்கப்படும் வரி.

MODVAT:  

ஏற்றுமதியாளர்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவுவது.

ஓட்டுநர் இருக்கையின் சிறப்பு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.ஓட்டுநரின் சிறப்பும்..!
அவர் இருக்கையின் பற்றிய
சிறப்பும்.மதிப்பும்
தெரியுமா உங்களுக்கு..!?
நடத்துனர் அமர்ந்திருக்கும்
இருக்கையை
CI வந்தால் எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
JE வந்தால் CI எழந்துநின்று
சீட் தரவேண்டும்.
AEவந்தால் JE எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
BM வந்தால் AE எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
DM வந்தால் BM எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
GM வந்தால் DM எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
MD வந்தால் GM எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
சேர்மன் வந்தால் MD எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
செகரட்டிரி வந்தால் சேர்மன் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
அமைச்சர் வந்தால் செகரட்டிரி எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
முதல்வர் வந்தால் அமைச்சர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
கவர்னர் வந்தால் முதல்வர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
பிரதமர் வந்தால் கவர்னர் எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
ஜனாதிபதி வந்தால் பிரதமர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும். இந்தியாவில்
ஜனாதிபதி மட்டுமே யார் வந்தாலும்
எழுந்துநின்று சீட் தரவேட்டியது இல்லை.
அதுபோலதான் ஓட்டுநருக்கும் அவர்இருக்கைக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. அவர்யார் வந்தாலும்
எழுந்து நிற்க்தேவையும் இல்லை.
ஒட்டுநர் இருக்கையை விட்டுதரவேண்டியது
இல்லை.
அவ்வளவு உயர்வானது ஓட்டுநர் இருக்கை.
என்பதை இனியாவது தெரிந்து
கொள்ளவேண்டியது நம் கடமை.

19 ஜூன் 2017

தமிழின் சிறப்பு...

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். தமிழின் சிறப்பு
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா ?
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
*இதுவே #தமிழின் சிறப்பு*
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.
உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்.
.....

வேட்டி அணியுங்க!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். லுங்கி அணிவதை தவிர்த்து வேட்டி அணியுங்க, லுங்கி அணிவதால் அனுபவிக்கும் தொல்லைகளும்,வேட்டி அணிவதால் அனுபவிக்கும் நன்மைகளும் இதோ...
                 நீங்களே முடிவு செய்யுங்கள்.விலை குறைவாகவும், இயற்கையை பாதிக்காததும்,  மரியாதையான பார்வை தரக்கூடியதும், உடலுக்கும் நன்மை தரக்கூடிய  வேட்டியை பயன்படுத்துவதா..?அல்லது  மூன்று மடங்கு விலை கொடுத்து, பலர் குடிக்கும் நீரில் விஷம் கலந்து, ஆரோக்கியம் இல்லாத வெளிநாட்டு உடையாம் லுங்கியை உடுத்துவதா..?

                                          ஒரு லுங்கி தயாரிக்க சுமார் 4,000 லிட்டர் குடிநீர் சாய விஷம் கலக்கப்பட்டு நாசமாகிறது.லுங்கி என்பது இந்திய - தமிழ் கலாச்சாரமன்று. நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு லுங்கி சரியான உடை கிடையாது. மூட்டப்படுவதால் அதாவது முனைகள் இணைத்து தைக்கப்படுவதால், காற்றோட்டம் தடைபடுகிறது. அதில் பாரம்பரியமோ, ஆரோக்கியமோ, மரியாதையோ கிடையாது.
             மாறாக வெள்ளை வேட்டி, அதுவும் கைத்தறி வேட்டி சாயமிடாமல் கிடைக்கும். வீட்டில் இருக்கும்போது கட்டிக்கொள்ள பயன்படுத்தலாம். மிகவும் வசதியாக இருக்கும். நம் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. கைத்தறி வேட்டியில் நூல் இடைவெளிகளால் காற்றோட்டம் மிக நன்றாக இருக்கும். மூட்டுதலும் இல்லையென்பது இன்னொரு நன்மைங்க. வீட்டில் தான் என்பதால் அனைவரும் நிச்சயம் செயல்படுத்தலாம். செலவும் மிக குறைவு. மிக நல்ல வேட்டி நூறு ரூபாய் விலைதான் இருக்கும். ஆனால் ஒரு நல்ல லுங்கி வாங்க முன்னூறு ரூபாய் செலவு செய்ய வேண்டும்!

17 ஜூன் 2017

காவல்துறை பற்றி.

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.நமது தமிழ்நாடு மாநில காவல்துறை பற்றி அறிவோம் வாங்க.பதிவிட்ட நணபர் திரு.சரவண அரவிந்த் அவர்களுக்கு நன்றிங்க.
தமிழ்நாடு காவல்துறை பற்றி..
முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 88,672 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, சென்னைப் புறநகர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 32 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.
காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
கடலோர காவல் துறை (Coastal Security Group)
குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
இரயில்வே காவல்துறை (Railways)
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
பயிற்சிப் பிரிவு (Training)
காவல்துறையில் பெண்கள்
இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது.
காவல்துறைப் பதவிகள்
தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;
தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள்
பதவி
பதவிச் சின்னம்
காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP)
அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் தலைவர் (IGP)
ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் துணைத்தலைவர் (DIG)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP)
மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP)
மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
ஆய்வாளர் (Inspector)
மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
உதவி ஆய்வாளர் (Sub-Inspector)
இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
தலைமைக் காவலர் (Head Constable)
சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
முதல்நிலைக் காவலர் (PC-I)
சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர் (PC-II)
பட்டை எதுவுமில்லை.
நன்றி: மோகன் வழக்கறிஞர்